எதிர்க்கட்சியினரைப் போல் செயல்பட வேண்டாம்

தெமர்லோ,செப்டம்பர் 14-

பாஸ் கட்சியினால் நிர்வகிக்கப்பட்டு வரும் மாநில அரசாங்கங்களில் ஓர் எதிர்க்கட்சியைப் போல் செயல்பட வேண்டாம் என்று பாஸ் கட்சி உறுப்பினர்களை அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கேட்டுக்கொண்டார்.

சொந்த அரசாங்கத்திலேயே எதிர்க்கட்சியைப் போல் செயல்படுவது என்பது ஏற்படைய செயல் அல்ல என்று பகாங், தெமர்லோவில் இன்று நிறைவுப்பெற்ற பாஸ் கட்சியின் 70 ஆவது பொதுப் பேரவையை முடித்து வைத்து உரையாற்றுகையில் ஹாடி அவாங் இதனை தெரிவித்தார்.

தற்போது கிளந்தான், திரெங்கானு, கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநில அரசாங்கங்களை பாஸ் கட்சி நிர்வகித்து வருவதை மேற்கோள்காட்டி, ஹாடி அவாங் இதனை சுட்டிக்காட்டினார்

WATCH OUR LATEST NEWS