சீனம்- தமிழ் மொழியை கற்பதால் மற்ற இனங்களை கவர முடியாது

கோலாலம்பூர், செப்டம்பர் 17-

சீனர்கள் மற்றும் இந்தியர்களின் தாய்மொழியை கற்றுக் கொண்டால் முஸ்லிம் அல்லாதவர்கள் பாஸ் கட்சியில் செருவார்கள் என்ற கருத்து ஒருபோதும் வெற்றி பெறாது என்று அரசியல் ஆய்வாளர் மஸ்லான் அலி கூறினார்.


பாஸ் கட்சியை அவர்களின் மொழியாற்றலை வைத்து முஸ்லிம் அல்லாதவர்கள் மதிப்பிடுவது இல்லை என்றார் அவர். மாறாக முஸ்லிம் அல்லாதவர்களை கவரும் வகையில் பாஸ் கட்சியின் அணுகுமுறை மாற வேண்டும்.


கடந்த காலங்களில் பாஸ் கட்சியை வழிநடத்திய மூத்த பெரும் தலைவர் நிக் அஜிஸ் நிக் அமாட் போன்றவர்கள் உருவாக்கிய பாஸ் கட்சி எல்லோருக்குமானது என்ற ஒரு சுலோகம்தான் முஸ்லிம் அல்லாதவர்களை கவரும் அவர்களை ஏற்கவைக்கும் என்றார் அவர்.
பாஸ் கட்சி எல்லா இன்ங்களின் உரிமைக்கும் போராடும் என்ற நிலை வந்தால்தான் மற்ற இனங்கள் அதை ஆதரிக்கும். இப்போது மலாய் முஸ்லிம்களின் நலனை மட்டும்பேசும் கட்சியாக பாஸ் இருக்கிறது.


நிக் அஜிஸ் இருந்தபோது பிகேஆர் ஜசெகவுடன் பக்காத்தான் ராக்யாட் என்ற கூட்டணியில் இருந்தார். அப்போது பாஸ் கட்சியின் ஒருமிதமான தன்மை மக்களை கவர்ந்தது என்றார் ஆய்வாளர் மஸ்லான் .


அண்மைய பாஸ் பேரவையில் இளைஞரணி உறுப்பினர் ஒருவர் முஸ்லிம் அல்லாதவர்களை கவர பாஸ் உறுப்பினர்கள் தமிழ், சீன மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அவர் .

WATCH OUR LATEST NEWS