விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்

கோலாலம்பூர், செப்டம்பர் 17-

தீபகற்ப மலேசியாவைச் செர்ந்த மருத்துவ நிபுணர் டாக்டர். டே டீன் யா, சபாவில் லஹாட் டத்து மருத்துவமனையில் பணியாற்றிய காலக் கட்டத்தில் தமது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சர்டத்தோஸ்ரீ டாக்டர் டுசுல்கேப்ளி அஹ்மட் கேட்டுக் கொண்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் உயர் மருத்துவ அதிகாரியினால் பகடிவதைக்கு டாக்டர். டே டீன் யா , ஆளானதாக கூறப்படுகிறது . இது போன்ற பகடிவதை சம்பவங்களை சுகாதார அமைச்சு இனியும் சகித்துக் கொள்ளாது என்று அமைச்சு டத்தோஸ்ரீ டாக்டர் டுசுல்கேப்ளி அஹ்மட் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS