புத்ராஜெயா,செப்டம்பர் 17-
இருபது சமூக நல இல்லங்களில் 17 வயதுக்குக்கு உட்பட்ட பிள்ளைகள் மிக மோசமாக நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணையை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Global Ikwan Service and Business Holding நிறுவனத்துடன் தொடர்புப்படுத்தப்படட இந்த விவகாரம் தொடர்பில் பலதரப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஒட்டுமொத்த நிலையில் இவ்விவகாரம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாமன்னர் வலியுறுத்தியுள்ளார்