குவாந்தன்,செப்டம்பர் 17-
குவந்தான், பாலோக்- கில் உள்ள கெம் நெமோ முகாமில் மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்ட சாய்ந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவம் இன்று மாலை 3.56 மணியளவில் நிகழ்ந்தது. இதில் சே ஜகரியா சே அலி என்ற 67 வயது நபர், சம்பவ இடத்திலேயே மாண்டதாக தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்த முதியவரின் உடலை மீட்பதற்கு போலீசார், தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவியை நாடினர்.