96 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன

கோலாலம்பூர், செப்டம்பர் 18-

சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் உள்ள சமூக நல இல்லங்களில் சிறார்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக Global Ikhwan நிறுவனத்திற்குச் சொந்தமான 96 வங்கிக் கணக்குள் முடக்கப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

5 லட்சம் வெள்ளிக்கும் மேலான அந்த வங்கிக் கணக்குகளை சட்டவிரோத நாணயப் பரிவர்த்தனைக் குற்றச்செயல் விசாரணைப் பிரிவு முடக்கியுள்ளதாக அவர் கூறினார்.

இதுவரை அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 5 லட்சத்து 81 ஆயிரத்து 552 வெள்ளி மதிப்புள்ள 96 வங்கிக்கணக்குகள், 2001 ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கை மற்றும் கறுப்புப்பணத் துடைத்தொழிப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாக ஐஜிபி தெரிவித்தார்.

நான்கு வங்கிக் கணக்குகள் மூடப்பட்ட வேளையில் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 8 வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS