கூலாய், செப்டம்பர் 18-
காருடன் மோதியதில், மோட்டார் சைக்கிளுடன் தூக்கி எறியப்பட்ட ஆடவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.
இச்சம்பவம் நேற்று மாலை 6.41 மணியளவில் ஜோகூர்,ஜாலான் கூலாய் – கோட்டா டிங்கி சாலையில் நிகழ்ந்தது. இதில் 25 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டி, கடும் காயங்களுடன் உயரிழந்ததாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் தந் செங் லீ தெரிவித்தார்.
கூலாய் – யிலிருந்து கோட்டா டிங்கி – யை நோக்கி 75 வயது நபர் செலுத்திய Kia ரக காரில் அந்த மோட்டார் சைக்கிளோட்டி மோதியதாக கூறப்படுகிறது.
சவப்பரிசோதனைக்கு ஏதுவாக அந்த நபரின் உடல், டெமெங்காங் ஸ்ரீ மகாராஜா துன் இப்ராஹிம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.