சர்சைக்குரிய Global Ikhwan நிறுவனத்தின் உறுப்பினர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோலாலம்பூர், செப்டம்பர் 18-

சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள 20 சமூக இல்லங்களில் போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் மீட்கப்பட்ட 402 சிறார்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புபடுத்தப்பட்ட Global Ikhwan Service and Business Holdings நிறுவனத்தின் உறுப்பினர் ஒருவர், புத்ராஜெயா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

தமக்கு எதிராக கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி செய்து கொள்ளப்பட்ட போலீஸ் புகாரை மீட்டுக்கொள்ளும்படி பெண் ஒருவரை மிரட்டியதாக Global Ikhwan நிறுவனத்தின் உறுப்பினரான 39 வயது மொஹமட் ரிசா மாக்கார் என்ற அந்த நபர், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

மாஜிஸ்திரேட் அஹ்மத் அஃபிக் ஹசன் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த நபர், 25 வயதுசிதி நூர் டாலியா தியானா – என்ற பெண்ணையும், அவரின் குடும்ப உறுப்பினர்களையும் மிரட்டும் தோரணையில் குறுந்தகவலை அனுப்பிவைத்தாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

இக்குற்றத்தை கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி இரவு 10 மணியளவில் புத்ராஜெயா, முன்னிலை 4 என்ற இடத்தில் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 506 பிரிவின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS