புத்ராஜெயா,செப்டம்பர் 18-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கோரியதைப் போல முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் இரண்டு மகன்களும் தங்கள் சொத்து விபரங்களை அறிவித்து விட்டனர் என்று அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
மொக்ஸானி மகாதீர் மற்றும் மிர்சான் மகாதீர் ஆகிய இருவரும், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நிர்ணயித்து இருந்த காலக்கெடுவிற்குள் தங்கள் சொத்து விபரங்களை அறிவித்து விட்டனர் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.
தற்போது, அவர்களின் சொத்து விபரங்கள் ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.