அந்த நபர் அக்டோபரில் குற்றஞ்சாட்டப்படுவார்

புத்ராஜெயா,செப்டம்பர் 18-

சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை முகப்பிடங்களில் Setting என்ற சிறப்பு முகப்பிடம் மூலம் அந்நியத் தொழிலாளர்களை மலேசியாவிற்குள் நுழைவதற்கு அனுமதிப்பதில் மூளையாக இருந்து செயல்பட்டவர் என்று நம்பப்படும் சந்தேகப்பேர்வழி, அடுத்த மாதம் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM அறிவித்துள்ளது.

மலேசிய குடிநுழைவுத்துறையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக முதிர்நிலை அதிகாரியாக செயல்பட்டவர் என்று நம்பப்படும் 40 வயது மதிக்கத்தக்க அந்த அதிகாரி, சிறப்பு முகப்பிடங்களில் Setting முறையை அமைத்து அந்நிய நாட்டவர்களை அனுமதித்ததாக கூறப்படுகிறது.

அந்த நபர் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி SPRM- மினால் கைது செய்யப்பட்டதாக அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் குடிநுழைவுத்துறைக்கு தலைமையேற்று இருந்த அந்த நபர், விமான நிலையத்தில் அந்நிய நாட்டவர்கள், எவ்வித சோதனையிமின்றி நாட்டிற்குள் நுழைவதற்கு தனக்கு கீழ் இதர 50 அதிகாரிகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்ருந்திருந்ததாக நம்ப்படுகிறது என்று இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அஸாம் பாக்கி இதனை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS