கோலாலம்பூர், செப்டம்பர் 18-
கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயில் – சாலையில் விபத்துக்குள்ளாகி, காயமுற்ற இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு, மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் உடன் செல்லும் மருத்துவக்குழுவினர் உதவிக்கரம் நீட்டி, துணைப் புரிந்தனர்.
இந்த முதலுதவி சிகிச்சையில் மாமன்னருடன் உடன் செல்லும் ஆபத்து அவசர வேளைகளின் உதவும் மருத்துவக்குழுவினரில் ஒரு மருத்துவ நிபுணர், மற்றும் மருத்துவ உதவியாளர் உதவியதாக மாமன்னரின் முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காயமுற்ற இருவரில் ஒருவர் கோலாலம்பூர் பெரிய மருத்துமனையில் சேர்க்கப்படுவதற்கு மாமன்னரின் தனிப்பட்ட அம்புலன்ஸ் வண்டி பயன்படுத்தப்பட்டது.