சுங்கை பூலோ,செப்டம்பர் 18-
சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டு இருந்த கைதி ஒருவர் தப்பித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று புதன்கிழமை பிற்பகல் 3.56 மணியளவில் சுங்கை பூலோ மருத்துவமனையில் நிகழ்ந்தது.
27 வயதுடைய கலைக்குமார் ஆனந்தன் என்று அந்த கைதி அடையாளம் கூறப்பட்டுள்ளதாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் முகமது ஹபீஸ் முஹம்மது நோர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட கைதி, போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் எட்டு குற்றப்பதிவுகளை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.