சிப்பாங் , செப்டம்பர் 18-
சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை முகப்பிடங்களில் அந்நிய நாட்டவர்கள் சோதனையின்றி நாட்டிற்குள் நுழைவதற்கு SETTING முகப்பிடங்களில் நிகழ்ந்த மிகப்பெரிய மோசடி தொடர்பில் 50 அதிகாரிகள் மற்றும் 60 தனிநபர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார்.
இதில் குடிநுழைவுத்துறையை சேர்ந்த இரண்டு அதிகாரிகளின் படுக்கை அறையில் 8 லட்சம் வெள்ளி ரொக்கத்தை SPRM மீட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
95 நபரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்ததில் மொத்தம் 37 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்தார்.
பகாங்கில் Gred KP 22 பிரிவைச் சேர்ந்த குடிநுழைவுத்துறையின் மூத்த பெண் அதிகாரியின் வீட்டில் 5 லட்சத்து 18 ஆயிரத்து 250 வெள்ளி கைப்பற்றப்பட்டது. அந்தப் பணத்தை அவர் தனது படுக்கை அறையின் கைப்பையில் வைத்திருந்ததாக அஸாம் பாக்கி விளக்கினார்.
மலாக்காவைச் சேர்ந்த Gred KP 19 பிரிவைச் சேர்ந்த குடிநுழைவுத்துறை ஆண் அதிகாரியிடமிருந்து 2 லட்சத்து 48 ஆயிரத்து 443 வெள்ளி கைப்பற்றப்பட்டது. அவர் அந்த ரொக்கத் தொகையை தனது படுக்கை அறையின் கட்டிலில் பதுக்கிவைத்திருந்ததாக அஸாம் பாக்கி தெரிவித்தார்.
அந்த அதிகாரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரொக்கப் பணத்தில் 9 ஆயிரத்து 900 அமெரிக்க டாலரும் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டடார்.
தவிர 19 கார்கள், 13 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தவிர 2 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 27 தங்க டினார்கள். தங்க மோதிரம், சங்கிலி, காதணிகள், 12 கைக்கடிகாரங்கள், 30 விவேக கைப்பேசிகள் மற்றும் மடிக்கணிகள் ஆகியவற்றையும் SPRM பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த லஞ்ச ஊழல் மற்றும் மோசடியில் 40 வயது மதிக்கத்தக்க உயர் அதிகாரியுடன் 50 குடிநுழைவு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளதாக புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அஸாம் பாக்கி விளக்கினார்.