ஜார்ஜ் டவுன், செப்டம்பர் 18-
பினாங்கு, ஜார்ஜ்டவுன், லெபுக் கெரேஜா- வில் உள்ள பாரம்பரிய கட்டடடத்தில் கான்கிரட் பாறாங் கல்லை இடித்து தள்ளியவாறு ராட்ஷச மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு கார் மீது சாய்ந்ததில் அதில் பயணம் செய்த இரண்டு சீன நாட்டு சுற்றுப்பயணிகள் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் இன்று புதன்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் நிகழ்ந்தது. தந்தை, மகள் என்று நம்பப்படும் காரின் முன்இருக்கையில் 30 வயது பெண்ணும், பின் இருக்கையில் அமர்ந்திருந்த 50 வயது நபரும் கடும் காயங்களுடன் இறந்து கிடந்ததாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
அந்த காரை செலுத்தியதாக நம்பப்படும் சுற்றுலா வாகன ஓட்டுநரான ஒரு பெண் அங்கிருந்து தப்பிவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக பிற்பகல் 2.29 மணியளவில் தீயணைப்பு, மீட்புப்படையினர் ஓர் அவசர அழைப்பை பெற்றதாக பினாங்கு, திமூர் லாவுட் செயலாக்க கோமந்தர் முஹம்மது சியாபிக் நூர் அஸ்மான்தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் மொத்தம் மூன்று கார்கள் சிக்கிக்கிடந்ததாக அவர் குறிப்பிட்டார்.