சிரம்பான் ,
சிரம்பான், ஜாலான் தம்பின் – செரம்பன் சாலையில் நேற்று புதன்கிழமை நிகழ்ந்த 10 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்திற்கு காரணமானவர் என்று சந்தேகிக்கப்படும் லோரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
அந்த நபர், போதைப்பொருள் உட்கொண்டிருப்பது, சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்ததைத் தொடர்ந்து 38 வயது லோரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது சே டின் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு ஏதுவாக அந்த நபரை தடுத்து வைப்பதற்கு இன்று நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று பிற்பகல் 1.25 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் எட்டு கார்கள் மற்றும் இரு லோரிகள் சம்பந்தப்பட்டு இருந்தன. இதில் லோரியின் அடியில் சிக்கிய Proton Iswara காரின் 31 வயது ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.