வோவ்வேர்ல்ட் , செப்டம்பர்
மத்திய கிழக்கு நாடான Lebanan-னில் பேஜர்கள் வெடிப்பு நடந்த ஒரு நாளுக்கு பிறகு வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 450 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Hezbollah ஆயுதக் குழுவால் பயன்படுத்தப்பட்ட வாக்கி-டாக்கிகள் தலைநகர் Beirut-டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள், PEKKA பள்ளத்தாக்கு, தெற்கு லெபனான் போன்ற Hezbollah கோட்டைகளாகக் கருதப்படும் பகுதிகளில் வெடித்தன.
ஏற்கெனவே லெபனானில் நூற்றுக்கணக்கான பேஜர்கள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
இந்த நிலையில் பல வாக்கி டாக்கி சாதனங்கள் வெடித்துள்ளன.
தெற்கு லெபனானில் உள்ள SIDON-னில் உள்ள ஒரு தொலைபேசி கடையில் இருந்து புகை வெளியேறும் புகைப்படங்கள் வந்துள்ளன.