வட்டி பணியாளர் மீது குற்றச்சாட்டு

ஈப்போ , செப்டம்பர் 19-

ஆறு வெவ்வேறு வீடுகளில் சிவப்பு சாயம் வீச்சு நடத்தியதாக வட்டி முதலையின் கைக்கூலி ஒருவர் ஈப்போ, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

சீ வை லியோங் என்ற 44 வயதுடைய அந்த வட்டி முதலைப் பணியாளர், மாஜிஸ்திரேட் P. புனிதா முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றவியல் சட்டம் 427 பிரிவின் கீழ் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஜுலை மாதம் 13 ஆம் தேதி காலை 6 மணியளவில் ஈப்போ, லஹத், கம்போங் பாரு புக்கிட் மேரா உட்பட ஈப்போவில் பல்வேறு இடங்களில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தனக்கு எதிரான ஆறு குற்றச்சாட்டுகளில் இரண்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அந்த நபருக்கு மாஜிஸ்திரேட் புனிதா, 2 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் நான்கு மாத சிறைத் தண்டனை விதிப்பதாக தீர்ப்பு அளித்தார்.

WATCH OUR LATEST NEWS