சிரம்பான் ,செப்டம்பர் 19-
சிரம்பான் , ஜாலான் தம்பின் – சிரம்பான் சாலையில் நேற்று புதன்கிழமை நிகழ்ந்த 10 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்திற்கு காரணமானவர் என்று சந்தேகிக்கப்படும் லோரி ஓட்டுநரை இரண்டு நாள் தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றனர்..
38 வயதுடைய அந்த லோரி ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைக்கு ஏதுவாக அவரை தடுப்புக்காவலில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட் ஃபேரஸ் சியுஹாதா அனுமதி அளித்தார்.
இந்த விபத்தில் லோரியின் அடியில் 31 வயது காரோட்டி, சம்பவ இடத்திலேயே மாண்டார். 48 வயது மாது, கடும் காயங்களுடன் சிரம்பான், துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.