அந்த வழக்கு விசாரணை மூடப்படவில்லை

பூச்சோங்,செப்டம்பர் 20-

ஒரு மாற்றுத் திறனாளியான e- hailing ஓட்டுநரை ஒருவரை அரச பேராளரின் போலீஸ் மெய்க்காவலர் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை மூடப்படவில்லை. அதன் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த வழக்கின் விசாரணையின் ஆகக்கடைசியான நிலவரங்களை தாமே தனிப்பட்ட முறையில் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளையில் இச்சம்பவம் தொடர்பாக ஆருடங்கள் கூறப்படுவதை அனைத்து தரப்பினரும் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS