வெளிநாட்டிற்கு செல்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வேண்டும்

புத்ராஜெயா,செப்டம்பர் 20-

அரசாங்க ஏஜென்சிகள் மற்றும் சார்பு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், பணி நிமித்தம் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை ஏற்படுமானால், சம்பந்தப்பட்ட / அவற்றின் அமைச்சுகளுக்கு ஏற்ப அமைச்சரின் அங்கீகாரத்தை பெற வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் கடனை குறைக்கும் முயற்சியாக சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாட்டிற்கு செல்வதற்கு தத்தம் அமைச்சர்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்டவர்களின் அத்தகைய வெளிநாட்டுப் பயணம் அவசியமான ஒன்றா? என்பது குறித்து எல்லாக் கோணங்களிலும் ஆராயப்படும் என்று ஃபஹ்மி ஃபாட்சில் குறிப்பிட்டார்.

அவசியமற்ற பயணங்களை தடுக்கும் நோக்கிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS