இலங்கை கடற்படையினர், தமிழக கடற்றொழிலாளர்களை கைது செய்வதை, தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர் ஜி.கே.வாசன் கண்டித்துள்ளார்

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை, விரைவில் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி, இராமேஸ்வரம் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 45 பேருக்கு 2.76 கோடி ரூபாய் அபராதமும், ஆறு மாத சிறைத்தண்டனையும், இலங்கை நாட்டின் நீதிமன்றம் விதித்துள்ளது

பராத பணம் 

அவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த அபராதம் மிகப்பெரியது. மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.

அத்துடன், இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து நடுக்கடலில் கைது செய்யப்படுவதால் தமிழக கடற்றொழிலாளர்கள், தங்களது வாழ்வாதாரம் குறித்து தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

WATCH OUR LATEST NEWS