ஷா ஆலம், செப்டம்பர் 20-
சிலாங்கூர் மாநிலத்தில் குரங்கம்மை நோய் பரவலைத் தடுப்பதற்கு கூடுதல் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி குரங்கம்மை நோய் சம்பவம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப சிலாங்கூர் மாநிலத்தில் கூடுதல் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜமாலியா ஜமாலுதீன் குறிப்பிட்டார்.