கோலாலம்பூர், செப்டம்பர் 20-
சுங்கைபூலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கைதி கலைக்குமார், கடந்த புதன்கிழமை தப்பிச்சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து அவருக்கு எதிரான தேடுதல் வேட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுங்கைபூலோ மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் முகமட் ஹபீஸ் முகமது நார் தெரிவித்தார்.
உள்ளூரைச் சேர்ந்த 27 வயதுடைய அந்த நபர், காதில் ஏற்பட்ட ரத்தக் கசிவினால் சுங்கைபூலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்ததாக முகமட் ஹபீஸ் குறிப்பிட்டார்.
புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அவர் மருத்துமனையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார். அவரை தேடும் பணியை மலேசிய சிறைச்சாலை இலாகாவின் ஒத்துழைப்புடன் போலீசார் முடுக்கிவிட்டு இருப்பதாக முகமட் ஹபீஸ் தெரிவித்தார்.