ஷா ஆலம், செப்டம்பர்
தங்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டிய 15 லட்சம் வெள்ளியை திருப்பிக்கொடுப்பதில் இழுத்தடிக்கும் போக்கை கையாண்ட கிள்ளானைச் சேர்ந்த ஜெயசர்மா, அந்தப் பணத்தை திருப்பிக்கொடுக்கும் விவகாரத்தில் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு 20, 25 அடியாட்களுடன் வந்தார் என்று ஐவரை உள்ளடக்கிய சித்தியவான், ரக்ஷா மெட்டல் நிறுவனத்தின் வர்த்தக சகாக்களில் ஒருவரான விக்னேஸ்வரராவ் ரவீந்திரன் அம்பலப்படுத்தினார்.
ஷா ஆலம்,- செக்ஷன் 25, தாமான் ஸ்ரீ முடாவில் உள்ள ஓர் உணவகத்தில் கடந்த ஜுன் முதல் தேதி நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் ஜெயா சர்மா எங்களை அழைத்து இருந்தார். அதேவேளையில் அவர் தரப்பில் பேசுவதற்கு கம்போங் சுபாங் ஆனந்த் என்பவரை எங்களுக்கு ஜெயசர்மா அறிமுகப்படுத்தினார் என்று விக்னேஸ்வரராவ் விவரித்தார்.
ஜெயசர்மாவை நீங்கள் மிரட்டியதாக ஜெயசர்மாவும், அவரின் மனைவியும் போலீசில் அளித்தது பொய் புகார் என்று எங்களுக்கு தெரியும். ஆனால், அவர்கள் செய்த அந்த பொய்ப்புகாரை மீட்டுக்கொள்ள வேண்டுமானால் ஜெயசர்மா உங்களுக்கு தர வேண்டிய எஞ்சியப் பணமான 4 லட்சத்து 57 ஆயிரத்து 500 வெள்ளியை வேண்டாம் என்று கூறி, நீங்கள் இப்போதே எழுதிக்கொடுத்தால் அந்தப் பொய் புகாரை மீட்டுக்கொள்ளும்படி அவர்களை, நான் கேட்டுக்கொள்வேன் என்று கம்போங் சுபாங் ஆனந்த் என்பவர் எங்களிடம் பேரம் பேசியதாக விக்னேஸ்வரராவ் தெரிவித்தார்.
கொடுத்தப் பணத்தை திரும்ப கேட்டதற்காக பொய் புகார் செய்ததாக கூறப்படும் கிள்ளானைச் சேர்ந்த ஜெயசர்மா மற்றும் அவரின் மனைவிக்கு எதிராக போலீஸ் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் அளித்துள்ள விக்னேஸ்வரராவ், சுமார் 30 லட்சம் வெள்ளி மதிப்பிலான பழைய இரும்புப்பொருள் கொள்முதல் விவகாரத்தில் ஜெயசர்மா நடத்திய மோசடி வேலைகள் குறித்து விவரிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். .
Caption
விக்னேஸ்வர ராவ் ரவீந்திரன்,
வர்த்தக சகா, RAKSHA METAL