பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 21-
பருவமழை மாற்றம் இம்மாதம் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி வரும் நவம்பர் மாதத் தொடக்கம் வரை நீடிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான Met Malaysia-வின் தலைமை இயக்குநர் முஹம்மது ஹெல்மி அப்துல்லா தெரிவித்துள்ளார்.
கடந்த மே 17 ஆம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழையின் இறுதிக்கட்டத் தொடக்கத்தை குறிக்கும் அதேவேளையில் அது நாட்டின் பல்வேறு திசைகளில் இருந்து பலவீனமான காற்று வீசும் எனக் கணிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த சூழ்நிலையானது, இடியுடன் கூடிய மழையை வரவழைக்கும் என்பதோடு இது குறுகிய காலத்தில் குறிப்பாக மாலை, அதிகாலையில் பெரும்பாலான பகுதிகளில் மேற்கு, தீபகற்பத்தின் உட்புறம், மேற்கு சபா, மத்திய சரவாக் பகுதிகளில் கனமழையோடு பலத்த காற்றையும் கொண்டு வரும் என்று முஹம்மது ஹெல்மி அப்துல்லா குறிப்பிட்டார்.