கோலாலம்பூர், செப்டம்பர் 21-
கோலாலம்பூர், கெப்போங்,மெஞ்சலரா அருகில் உள்ள ஒரு கேளிக்கை மையத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலையில் குடிநுழைவுத்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் வெளிநாட்டுப் பெண்கள் பலர், மலேசியாவில் வேலை செய்வதற்கான வேலை பெர்மிட்டை கொண்டிருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
GRO உட்பட ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவர்கள் தங்கள் வசம் கொண்டுள்ள வேலை பெர்மிட்டை ஒரு கவசமாக பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது குடிநுழைவுத்துறை சோதனையில் தெரியவந்துள்ளது என்று அதன் துணை தலைமை இயக்குநர் ஜாஃப்ரி எம்போக் தாஹா தெரிவித்துள்ளார்.
இச்சோதனை நடவடிக்கையின் போது 93 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 62 பேர் பெண்கள் ஆவார். தாய்லாந்து, வியட்நாம், சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த இவர்களிடம் வேலை உடல் உழைப்புத் தொழிலாளிக்கான பெர்மிட் இருப்பது தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.