PTPTN கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை

லுமுட் , செப்டம்பர் 21-

தேசிய உயர்கல்வி நிதி கழகமான PTPTN- னில் கல்வி கடனுதவியைப் பெற்று, அந்த கடனை இன்னும் திருப்பிச் செலுத்தாமல் இருந்து வரும் 4 லட்சத்து 30 ஆயிரம் பேரிடமிருந்து பணத்தை திரும்ப வசூலிப்பதற்கு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

PTPTN கடனைப் பெற்ற பலர், தங்கள் பட்டப்படிப்பை முடித்து பல வருடங்கள் ஆகிவிட்டனர். ஆனால் வாங்கிய கடனில் இதுவரையில் சல்லிக்காசுக்கூட செலுத்தப்படவில்லை என்று உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.

இதனால், 600 கோடி வெள்ளிக் கடன் தொகை செலுத்தப்படாமல் தற்போது நிலுவையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய பொறுப்பற்ற நபர்களின் போக்கினால், PTPTN – னின் தற்போதைய நிதி வளம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று ஜாம்ப்ரி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS