Bailey பாலம் திறக்கப்பட்டது / மக்கள் நிம்மதி பெருமூச்சு

தஞ்சோங் மாலிம் , செப்டம்பர் 21-

பேரா , ஜாலான் ஸ்லிம் ரிவேர் – க்கும் / பெஹ்ராங் ஹுலு – விற்கும் / இடையில் Bailey ஆற்றுப் பாலம் கட்டப்பட்டு, நேற்று முதல் பொது மக்களுக்கு திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து ஸ்லிம் ரிவேர் – ரில் / சிலிம் Village மக்கள் நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி அப்பகுதியில் ஏற்பட்ட நீர்ப்பெருக்கினால் நீரின் வேகத்தில் மரங்கள் அடித்து வரப்பட்டு, யுத்த காலத்தில் கட்டப்பட்ட அந்த கான்கிரேட் பாலம், ஆற்று நீரோடு அடித்து செல்லப்பட்டது.

இதனால் அந்த ஆற்றுப்பாலத்தின் இரு மருங்கிலும் வாழ்ந்த வரும்ஜலான் ஸ்லிம் ரிவேர் மற்றும் பெஹ்ராங் ஹுலு – மக்களின் பிரதான போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் இரு பகுதிகளிலும் மக்களின் போக்குவரத்தை இணைப்பதற்கு ஒரு தற்காலிக நடவடிக்கையாக இரும்பிலான அந்த Bailey பாலத்தை பேரா மாநில அரசு நிர்மாணித்துள்ளது.

வழக்கமாக தனது பலசரக்கு கடைக்கு வந்துப் போகும் நிரந்தர வாடிக்கையாளர்கள், அந்த ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்த சம்பவத்திற்கு பிறகு கடந்த 27 நாட்களாக வாடிக்கையாளர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டதாக Slim Village பகுதியில் மளிகைக்கடை நடத்தி வரும் 53 வயது K. ராமதாஸ் தெரிவித்தார்.

அந்த பாலம் மறுபடியும் கட்டப்பட்டப் பின்னர் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நேற்று முதல் தமது கடைக்கு வரத் தொடங்கிய வாடிக்கையாளர்கள் ஆனந்த கண்ணீர் விட்டதாக ராமதாஸ் கூறுகிறார்.

WATCH OUR LATEST NEWS