பினாங்கு டிஏபி தலைவர் சௌ கோன் இயோவ் 25 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியின் தலைமைப் பொறுப்பை இன்று ஒப்படைத்தார்

ஜார்ஜ் டவுன், செப்டம்பர் 21-

பினாங்கு முதலமைச்சராக இருக்கும் சௌ உறுப்பினர்கள் தொடர்ந்து கடினமாக உழைத்து, கட்சியின் நோக்கத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
கட்சியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் மக்களின் நம்பிக்கைகளால் வழிநடத்தப்படும் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பினாங்கு டிஏபி 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது வலுவாக உள்ளது. புதிய தலைவர் அரசியல் வளர்ச்சியில் கட்சியை மேலும் முன்னோக்கி வழிநடத்துவார் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.

இன்று ஸ்பைஸ் அரங்கில் நடைபெற்ற டிஏபி பினாங்கு மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தான் நியமனம் செய்யப்பட்டதில் இருந்து மாநில டிஏபியின் முக்கிய தலைவராக தனது பயணத்தை நினைவுகூர்ந்த சௌ, 1999 பொதுத் தேர்தலில் டான்ஸ்ரீ லிம் கிட் சியாங் மற்றும் மறைந்த டான்ஸ்ரீ கர்பால் சிங் ஆகியோருக்குப் பிறகு இந்த நியமனம் நிகழ்ந்ததாகக் கூறினார்.

அப்போது, ​​தனக்கு 41 வயது என்றும், டிஏபியின் அரசியல் போராட்டத்தைத் தொடரும் பொறுப்பு தன் தோள்களில் சுமத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்!

WATCH OUR LATEST NEWS