அம்னோ இளைஞரணித் தலைவர் டாக்டர் அக்மல் சலே

கோலாலம்பூர், செப்டம்பர் 21-

அம்னோ இளைஞரணித் தலைவர் டாக்டர் அக்மல் சலே, செப்பூத்தே எம்பி தெரசா கோக்கிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தங்கள் சட்டப் போராட்டத்தை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஜோகூர் டிஏபி தலைவர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அனைத்து உணவகங்களுக்கும் ஹலால் சான்றிதழைக் கட்டாயமாக்க வேண்டாம் என அண்மையில் அமைச்சரவை தீர்மானித்ததை அடுத்து, மாநிலக் குழு உறுப்பினர் டாக்டர் பூ செங் ஹவ்இதனைத் தெரிவித்தார்.

அமைச்சரவையின் இந்த முடிவு, மத்திய அரசமைப்புச் சட்டத்தின் 3வது பிரிவுக்கு ஏற்ப உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் கூட்டாட்சி அரசியலமைப்பை நாட்டின் மிக உயர்ந்த சட்டமாக மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த விஷயத்தில் திரேசா கோக்கின் அறிக்கை அனைத்து மலேசியர்களின் அரசியலமைப்பு உரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையிலானவை என்பதை இது நிரூபிக்கிறது என்று பூ மேலும் கூறினார்.

மலாய் மற்றும் மலாய் அல்லாத சிறு வணிகங்கள் உட்பட மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதால், அவரது கருத்துக்கள் அனைத்து தரப்பு மக்களின் கவலைகளை பிரதிபலிப்பதாக அவ்ற் தெரிவித்தார்.

எனவே, அரசியலமைப்பின்படி அனைத்து மதங்களைச் சேர்ந்த மலேசியர்களின் உணர்வுகளுக்கும் அக்மால் மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

அக்மால், தெரசா கோக்கிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்பது மட்டுமல்லாமல், உண்மையைப் புரிந்து கொள்ளத் தவறியதற்காக அனைத்து மலேசியர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

நாட்டின் எதிர்காலத் தலைவர்களில் ஒருவராக அவர் மிகவும் முதிர்ந்த தலைமையைக் காட்ட வேண்டும் மற்றும் கடந்த கால இருண்ட அரசியலை மீண்டும் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று பூ நினைவூட்டினார்!

WATCH OUR LATEST NEWS