கோலா கெடா படகு சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது

அலோர் ஸ்டார்,செப்டம்பர் 22-

அலோர் ஸ்டார் – யில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டதை அடுத்து வியாழக்கிழமை முதல் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இன்று கோலா கெடா – வில் லங்காவி – க்கு செல்லும் படகுப் போக்குவரத்துச் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. படகு சேவை ரத்து செய்யப்பட்டதால், 6,000க்கும் மேற்பட்ட பயணிகள் பணத்தைத் திரும்பக் கோரியுள்ளதாகவும் மேலும் 5,000 பேர் கோலா பெர்லிஸ் – லிருந்து பயணிக்க விரும்பினர் என பஹாரின் கூறினார்.


பாதிக்கப்பட்டப் பயணிகளுக்கு நிறுவனம் RM130,000 க்கும் அதிகமான தொகையைத் திருப்பி அளித்துள்ளதாக கூறினார். பாதிக்கப்பட்ட பயணிகளின் பணத்தை விரைவாகத் திரும்பப் பெறுவதை உறுதி செய்வதற்காக அவர்கள் 24 மணி நேரமும் இயக்கி வருகின்றனர்.


ஆகையால், இன்று கோலா கெடா – லிருந்து லங்காவி – க்கு நான்கு படகுப் பயணங்களும், Langkawi – யில் இருந்து கோலா கெடா -க்கு ஐந்து பயணங்களும் திட்டமிடப்பட்டுள்ளதாக Konsortium Ferrylines Ventures Sdn Bhd பொது மேலாளர் பஹரின் பஹரோம் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS