GISBH – விவகாரம் நியாயமான நோக்கில் விசாரிக்கப்பட வேண்டும்!

பாஸ் கட்சி வேண்டு கோள்

கோலாலம்பூர், செப்டம்பர் 21-

குளோபல் இக்வான் சர்வீசஸ் அண்ட் பிசினஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கீழ் உள்ள சமூக நல இல்லங்களில் குழந்தைகள் துஷ்பிரயோகம், பாலியல் அத்துமீறல் மற்றும் மாறுபட்ட இஸ்லாமிய போதனைகள் மீதான விசாரணைகளை பாஸ் கட்சி வரவேற்கும் அதே வேளையில், அது தொடர்பான நன்மை பயக்கும் அம்சங்களையும் நியாயமான நோக்கில் அணுக வேண்டும் என்று பாஸ் கட்சி விரும்புவதாக, இன்று ஓர் அறிக்கையில், அக்கட்சியி பொதுச்செயலாளர் தக்கியுதீன் ஹசான் தெரிவித்துள்ளார்.

GISBH-க்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் மீதான வெளிப்படையான மற்றும் தொழில்முறை விசாரணையை பாஸ் வரவேற்கிறது மற்றும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதையும் முழுமையாக ஆதரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர்,
இருப்பினும், GISBH மற்றும் அதன் வணிகங்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் எதிர்மறையான பிரச்சாரங்களை ஊக்குவிக்கும் சில கட்சிகள் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

GISBH-ஐ தண்டிக்கும் ஆர்வம் ஒட்டுமொத்த குழுவிற்கும், குறிப்பாக அதன் அப்பாவி உறுப்பினர்கள் மீதும் அல்லது GISBH-ன் செயல்பாடுகளின் சட்டபூர்வமான, சட்டத்தை மதிக்கும் மற்றும் நன்மை பயக்கும் அம்சங்களின் மீதும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்று தக்கியுதீன் வலியுறுத்தினார்.

பொறுப்பற்ற உணர்வுகள், தப்பான எண்ணங்கள், வணிகப் போட்டிகள் அல்லது சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள முயல்பவர்களின் அரசியல் சூழ்ச்சியில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்!

WATCH OUR LATEST NEWS