சுங்கை பெட்டானி , செப்டம்பர் 23-
குத்தகைத் தொழிலாளர் ஒருவர் ஆழமான கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு மியன்மார் பிரஜையான அந்த நபர் நேற்று காலையில் கெடா,சுங்கை பெட்டாணி, பண்டார் புதேரி ஜயா -வில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததாக கோலமூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அசாருதீன் வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
சக நாட்டவர்கள் மத்தியில் நிகழ்ந்த கைகலப்பில் அந்த நபர் தாக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்ப்படுகிறது. அவருடன் இருந்த அனைவரும் தப்பிவிட்டனர்.
இது மது போதையில் நிகழ்ந்த சண்டை அல்ல என்பதையும் அவர் விளக்கினார்.