கோலாலம்பூர், செப்டம்பர் 23-
சமூக நல இல்லங்களில் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் 402 சிறார்களுடன் தொடர்புப்படுத்தப்பட்ட Global Ikhwan Holdings நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் மீது 2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான SOSMA பாயலாம் என்று போலீஸ் படைத் தலைவர் தன் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் கோடி காட்டியுள்ளார்.
பிடிபட்டவர்கள் அனைவரும் தற்போது நடப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, புலன் விசாரணை செய்யப்பட்டு வந்த போதிலும் அவர்கள் மீது SOSMA பாய்வதற்கான சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையத்தில் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் ஐஜிபி இதனை தெரிவித்துள்ளார்.