அந்த வங்காளதேசிக்கு 2 நாள் தடுப்புக்காவல்

கோலாலம்பூர், செப்டம்பர்

விமான நிலையத்தில் செட்டிங் முகப்பிடங்களில் நிகழ்ந்த மிகப்பெரிய ஊழல் மோசடிக்கு குடிநுழைவு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வந்ததாக நம்பப்படும் வங்காளதேச நிறுவனம் ஒன்றின் இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலையில் புத்ராஜெயா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க அந்த சந்தேகப் பேர்வழியை இன்று தொடங்கி, நாளை செப்டம்பர் 24 ஆம் தேதி வரை இரண்டு தினங்களுக்கு தடுத்து வைப்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM- மிற்கு மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார்.

தனக்கு வேண்டிய வங்காளதேசப்பிரஜைகள் மலேசியாவிற்கு நுழைதவற்கு சம்பந்தப்பட்ட நபர், குடிநுழைவு அதிகாரிகளுக்கு 200 வெள்ளி முதல் 25 ஆயிரம் வெள்ளி வரை லஞ்சம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS