பள்ளி சிற்றுண்டி சாலையை 14 நாட்களுக்கு மூடுதற்கு உத்தரவு

ஈப்போ , செப்டம்பர் 26-

விஷக்கிருமி கலந்த உணவை உட்கொண்டு வாந்தி, வயிற்றப்போக்கிற்கு ஆளான ஈப்போ, செபோர் – தேசிய தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

நேற்று மாலை வரை பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 86 ஆக இருந்த வேளையில் அந்த எண்ணிக்கை இன்று காலையில் 101 ஆக உயர்ந்துள்ளது என்று பேரா மாநில சுகாதார, இந்தியர்கள் விவகாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் A. சிவநேசன் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட 101 மாணவர்களில் 50 பேர் பெண்கள் என்றும் 51 பேர் ஆண்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இவர்களில் ஒருவர் மட்டும் ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரின் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சிவநேசன் குறிப்பிட்டார்.

பள்ளி சிற்றுண்டி சாலையில் பொறிக்கப்பட்ட கோழி மற்றும் சுவை பானத்தில் விஷத்தன்மை கலந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பள்ளி சிற்றுண்டி சாலையை அடுத்த 14 நாட்களுக்கு மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக சிவநேசன் குறிப்பட்டார்

WATCH OUR LATEST NEWS