ஷா ஆலம், செப்டம்பர்
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இத்ரீஸ் ஷா-விடம் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சானுசி முஹமட் நோர் பகிரங்க மன்னிப்புக்கேட்டுக்கொண்டுள்ள விவகாரம், சுல்தானின் மேலான கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சிலாங்கூர் சுல்தானிடம் சனூசி மன்னிப்பு கேட்டுக்கொண்ட கிட்டத்தட்ட 24 மணி நேரத்தில் இவ்விவகாரம் சுல்தானிடம் சேர்க்கப்பட்டுள்ளது.
எனினும் சனூசியின் மன்னிப்பு தொடர்பில் எந்தவொரு கருத்தும் சிலாங்கூர் அரண்மனை வெளியிடவில்லை. மாறாக, சுல்தானிடம் தகவல் சேர்க்கப்பட்டுள்ளது என்று மட்டுமே சிலாங்கூர் அரச அலுவலகம் தெரிவித்துள்ளது..
சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் கோம்பாக், தாமன் செளயாங் முத்தியரா-வில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜுலை 11 ஆம் தேதி தாம் ஆற்றிய உரைக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக சனூசி நேற்று பகிரங்கமாக அறிவித்தார்.
சனூசி, நிந்தனை தன்மையில் உரையாற்றியதற்காக அவருக்கு எதிராக 3R சட்டத்தின் கீழ் ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தம்முடைய இந்த கோரிக்கையை ஏற்று, தம்மை மன்னித்து, அருளவேண்டும் என்று சிலாங்கூர் சுல்தானை, / சனூசி மிக உருக்கமாக கேட்டுக்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.