சட்டத்திட்டங்களை தோட்டத் தொழிலாளர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்

கோலாலம்பூர், செப்டம்பர் 27-

நாட்டிலுள்ள சட்ட திட்டங்களை தோட்டத் தொழிலாளர்கள் அவசியம் தெரிந்த வைத்திருக்க வேண்டும் என்று முன்னாள் மாநில போலீஸ் படைத்தலைவர் டத்தோ ஸ்ரீ அ.தெய்வீகன் அறிவுறுத்தினார்.

சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை புரிந்துணர்வு முதலியவற்றில் பிரச்சினைகள் தலைத்தூக்கியதன் காரணமாகத்தான் இந்தியர்கள் மத்தியில் அதிக அளவில் குற்றச் செயல்கள் உருவாக காரணமாக உள்ளதை போலீஸ் துறையில் 40 ஆண்டு கால சேவை ஆற்றிய போது தாம் மேற்கொண்ட ஆய்வின் வழி தெரிந்துகொண்டதாக டத்தோஸ்ரீ தெய்வீகன் கூறினார்.

 கிள்ளானில் கோல் கோஸ்ட் ஹோட்டலில்  சிலாங்கூர் மாநில தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரண்டு நாள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு உரையாற்றிய போது டத்தோ ஸ்ரீ அ.தெய்வீகன் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய  டத்தோஸ்ரீ தெய்வீகன்,  விட்டுக் கொடுக்கும் பனப்பாக்குவத்தை இந்தியர்கள் கடைபிடிக்க வேண்டும். ஒரு வினாடி கோபமே, பல அசம்பாவிதத்திற்கு வழி வகிக்கின்றது. 

எனவே இந்த கருத்தரங்கில கலந்துக் கொண்டுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒழுக்க மிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கோட்டுக் கொண்டார்.

இந்த நிகழவில் சிலாங்கூர் மாநில செயலாளர் வை.தாமசேகரன், பேராக் மாநில செயலாளர் எம்.குணசன், தேசிய உத்தியோகஸ்தர் எஸ்.நாராயணசாமி உட்பட 60 தோட்ட பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.

Caption

டத்தோஸ்ரீ அ. தெய்வீகன்,
முன்னாள் மாநில போலீஸ் தலைவர்.

WATCH OUR LATEST NEWS