1,399 போலீஸ்காரர்கள் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்

குளுவாங் , செப்டம்பர் 27-

ஜோகூர், மஹ்கோட்டா சட்டமன்ற இடைத் தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது. இந்த இடைத் தேர்தல் சுமூகமாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்வற்கு 20 வாக்களிப்பு மையங்களில் 1,399 போலீஸ்காரர்கள் கடமையில் அமர்த்தப்படுவர் என்று ஜோகூர மாநில போலீஸ் தலைவர் டத்தோ குமார் முத்துவேலு தெரிவித்தார்.

பொது பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, நெரிசல் மற்றும் பரபரப்புமிக்க வாக்களிப்பு மையங்களில் அதிகமான போலீஸ்காரர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர் என்று டத்தோ குமார் குறிப்பிட்டார்.

நாளை சனிக்கிழமை இடைத் தேர்தல் நடைபெற்று முடியும் வரையில் பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய எந்தவொரு விரும்பத்தகாத சம்பவமும் நிகழ்ந்து விடாமல் இருக்க போலீஸ் அதிகாரிகளும், உறுப்பினர்களும் நடப்பு சூழ்நிலையை அணுக்கமாக கண்காணித்து வருவர் என்று அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS