செப்டம்பர் 28-
ஹரி போட்டர் மற்றும் டோவ்ன்டன் அபே திரைப்படங்களுக்காக பெயர் பெற்ற நடிகை டேம் மேகி ஸ்மித் தனது 89ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டிஷ் மேடை மற்றும் திரையின் முன்னணி நடிகையான அவர் தனது வாழ்க்கையில் இரண்டு ஒஸ்கார் விருதுகளை வென்றுள்ளார்.
மேலும், எட்டு பாஃப்டா விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
இந்தநிலையில், செப்டம்பர் 27, வெள்ளிக்கிழமை அதிகாலையில் அவர் மருத்துவமனையில் காலமானார்.