உருகுவே கால்பந்து வீரர் உயிரிழப்பு! களத்திலேயே சுருண்டு விழுந்தார்! மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

செப்டம்பர் 28-

சாவோ பாலோ : உருகுவே கால்பந்து வீரர் ஒருவர் களத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்த நிலையில் மருத்துவமனையில் அவருடைய உயிர் பிரிந்தது. உருகுதே கிளப் நேஷனல் என்ற அணிக்காக விளையாடி வந்த ஜூவான் இஸ்கியர்டோ என்ற 27 வயது வீரரே பரிதாபமாக உயர்ந்திருக்கிறார்.

லிபர்டர்டோர்ஸ் கோப்பை என்ற தொடரில் சாவோ பாலோ அணிக்கு எதிராக உருகுவே கிளப் நேஷனல் அணி பிரேசில் நாட்டில் சாவோ பாலோ நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பலப்பரிட்சை நடத்தியது.

அப்போது ஆட்டத்தின் 84 வது நிமிடத்தில் களத்தில் திடீரென்று ஜுவான் மயங்கி சுருண்டு விழுந்தார். இதன் அடுத்து வீரர்களும் கள நடுவர்களும் அவர் அருகே சென்று பார்த்தபோது அவர் அசைவின்றி கிடந்தார். இதன் அடுத்து மருத்துவ குழு அவரை பரிசோதனை செய்தனர்.இதன்பிறகு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் அவர் எந்த ஒரு அசைவும் இன்றி மயக்க நிலையில் இருந்தார். உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று ஜுவான் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஜுவானுக்கு ஏற்கனவே முறையற்ற இதயத்துடிப்பு இருந்திருக்கிறது. இதற்காக அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று கால்பந்து விளையாடிய போது அவருடைய பிரிந்து இருக்கிறது. சுவானுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இதில் ஒரு குழந்தை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தான் பிறந்தது. ஜூவான் மரணம் கால்பந்து உலகிற்கு ஒரு கருப்பு நாளாக நாங்கள் பார்க்கிறோம் என்று சாவ் பாலோ அணி வருத்தம் தெரிவித்து இருக்கிறது.

உயிரிழந்த ஜூவானின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு ரசிகர்களின் சோகத்தில் தாங்களும் பகிர்ந்து கொள்கிறோம் என்றும் அந்த அணி பதிவிட்டு இருக்கிறது. இதே போன்று உருகுவே கிளப் நேஷனல் அணி வெளியிட்ட பதிவில் நமது வீரர் இன்று உயிரிழந்திருக்கிறார். இது எங்கள் மனதை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. சொல்ல முடியாத துயரத்தில் நாங்கள் இருக்கின்றோம் என்று குறிப்பிட்டிருக்கிறது. இது தங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் அந்த அணி கூறி இருக்கிறது .தென் ஆப்பிரிக்கா கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ள பதிவில் ஒட்டுமொத்த தென் அமெரிக்கா கால்பந்து ரசிகர்கள் துக்கத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

WATCH OUR LATEST NEWS