ஹுலு சிலாங்கூர்,செப்டம்பர் 28-
கடந்த சில தினங்களாக வீடொன்றில் நிலவி வந்த துர்நாற்றத்திற்கான மர்மம், ஒரு பெண்ணின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது மூலம் அந்த மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டுள்ளதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் அஹ்மத் பைசல் தஹ்ரீம் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.05 மணியளவில் ரவாங் அருகில் கம்போங் சுங்கை சோ- வில் ஒரு வீட்டில் ஓர் அந்நியப் பெண்ணின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட பெண் மூன்று நாட்களுக்கு முன்பு இறந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்த வீட்டில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அண்டை வீட்டுக்காரர்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து போலீசார் அந்த வீட்டை சோதனை செய்த போது, 48 வயது இறந்த கிடந்தது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த வீட்டில் சம்பந்தப்பட்ட பெண், தனியொரு நபராக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இருதய நோய், நீரிழிவு நோய் மற்றும் மற்றும் புற்றுநோய் காரணமாக அந்தப் பெண் இறந்து இருக்கக்கூடும் என்ற நம்பப்படுவதாக அவர் தெரிவித்தார்.