அந்த நிதியை நஜீப் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தவில்லை

கோலாலம்பூர், அக்டோபர் 01-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், அரபு நாட்டிலிருந்து பெறப்பட்ட நன்கொடையை தனது சொந்த நலனுக்காக அறவே பயன்படுத்தவில்லை என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

அந்த அரபு நன்கொடையை தனது சொந்த வங்கிக் கணக்கில் வரவு வைத்துக்கொள்வது மூலம் மக்களுக்கும், அரசியலுக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று நஜீப் நம்பினார் என்று அவரின் வழக்கறிஞர் தன்ஸ்ரீ முஹம்மது ஷஃபீ அப்துல்லா தெரிவித்தார்.

எனவே நஜீப்புடன் தொடர்புப்படுத்தப்பட்ட அந்த நிதி, லஞ்சப் பணம் என்று கூறுப்படுவதற்கான சூழல் இல்லை. அந்தப் பணத்தில் 95 விழுக்காட்டுத் தொகையை நஜீப், மக்களுக்காக குறிப்பாக பொது காரியங்களுக்காக பயன்படுத்தியுள்ளார் என்று முகமட் ஷாபி வாதிட்டார்.

அரபு நக்கொடையை பயன்படுத்தி, தனது சொந்த பயனீட்டுக்காக ஆடம்பரக் கப்பலோ அல்லது விமானத்தையோ அவர் வாங்கி விடவில்லை.
அந்த பணத்தில் 95 விழுக்காட்டுத்தொகையை நஜீப் தனது சொந்த நலனுக்கு பயன்படுத்தவில்லை என்பதற்கு தங்களிடம் முழு ஆதாரங்கள் உள்ளன என்று முகமட் ஷாபி தெரிவித்தார்.

நஜீப்பிற்கு எதிராக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 1MDB-யின் 230 கோடி வெள்ளி முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நீதிபதி டத்தோ கொலின் லாரன்ஸ் முன்னிலையில் வாதத்தை முன்வைத்த போது நஜீப்பின் பிரதான வழக்கறிஞரான ஷாபி அப்துல்லா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS