ஷா ஆலம், அக்டோபர் 01-
வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் மலேசியாவைச் சேர்ந்த தொழில் நிபுணர்களை தாயகத்திற்கு திருப்பிக்கொண்டு வருவதற்கான முயற்சி முன்னெடுக்கப்படும் என்று உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜாம்ப்ரி அப்துல் காதிர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட நிபுணர்கள், தங்களின் நிபுணத்துவத்தையும், ஆற்றலையும் தாய் மண்ணுக்கு வழங்க வேண்டி, இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த எதிர்பார்ப்பை நனவாக்கிட, Talent Corp எனப்படும் TalentCorp Malaysia Berhad- தரப்பினருடன் இணைந்து இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக டத்தோஸ்ரீ ஜாம்ப்ரி குறிப்பிட்டார்.
மலேசியாவை சேர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழில் வல்லுநர்கள் பல்வேறு துறைகளில் வெளிநாடுகளில் தங்களின் பங்களிப்பை வழங்கி கொண்டு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் மேலும் விவரித்தார்.