பள்ளி சிற்றுண்டிச்சாலை நடத்துநர், நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 01-

ஈப்போவில் உள்ள Chepor தேசிய தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், நச்சு உணவினால் வாந்தி, வயிற்றுப் போக்கிற்கு ஆளான சம்பவத்தைத் தொடர்ந்து அப்பள்ளியின் சிற்றுண்டி சாலை நடத்துநருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.

1983 ஆம் ஆண்டு உணவுச்சட்டம் 11 ஆவது விதியின் கீழ் அந்த சிற்றுண்டி சாலை நடத்துநர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருக்கிறார் என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் A. சிவநேசன் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் மாணவர்களின் உயிர் சம்பந்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மிக அசுத்தமாக பள்ளி சிற்றுண்டி சாலையை நடத்திய அதன் நடத்துநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று சிவநேசன் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS