போலி மருத்துவ விடுப்பு சான்றிதல், ஆதரமின்றி குற்றஞ்சாட்ட வேண்டாம்

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 01-

போலி மருத்துவ விடுப்பு சான்றிதலுடன் ஆசிரியர்களை ததொடர்புப்படுத்தி பேசுவதற்கு தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கமான NUTP, தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

போதிய வலுவான ஆதாரங்கள் இல்லாமல் பொறுப்பற்ற முறையில் இப்படியொரு அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று NUTP கேட்டுக்கொண்டுள்ளது.

போலி மருத்துவ விடுப்பு சான்றிதழுடன் ஆசிரியர்களை தொடர்புபடுத்தி பேசுவதை ஒரு போதும் அனுமதிக்கமுடியாது. காரணம், இது நாடு முழுவதும் சேவையில் இருந்து வரும் 4 லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்களின் தொழில் தர்மத்தை கேள்வி எழுப்புவதற்கு ஒப்பாகும் என்று NUTP-யின் பொதுச் செயலாளர் Fouzi Singon தெரிவித்தார்.

ஆசிரியர்களுக்கு மருத்துவ விடுப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது என்றால் சுகவீனப்பட்ட ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முடியாத நிலையில் குறிப்பட்ட காலத்திற்கு வழங்கப்படுகிறது என்பதே இதன் பொருளாகும் என்று ஃபௌஸி சிங்கன் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS