பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 01-
இயற்கை சீற்றத்திற்கு இலக்காகியுள்ள நோபாளத்தில் வெள்ளப்பகுதியிலிருந்து மலேசியர்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்கியிருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விஸ்மா புத்ரா அறிவித்துள்ளது.
மலேசியர்கள் நேபாளத்திற்கு பயணம் மேற்கொள்வதை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்றவர்கள் தலைநகர் காட்டுமண்டுவில் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.