ஹுலு சிலாங்கூர்,அக்டோபர் 02-
முதியவர் ஒருவர் செலுத்திய மோட்டார் சைக்கிள், காரில் மோதியதில் பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5.20 மணியளவில் கோலாலம்பூர் – ஈப்போ சாலையில் உலு சிலாங்கூர், செரெண்டா அருகில் நிகழ்ந்தது.
இதில் கோலகுபுபாருவை நோக்கி Honda Wave ரக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 69 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் அஹ்மத் பைசல் தஹ்ரீம் தெரிவித்தார்.
உயர் கல்விக்கூடத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் Perodua Alza- காரில் பிரேசர் மலையிலிருந்து கோம்பாக்கை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.