மாணவன் மரணத்தில் குற்ற அம்சம் இல்லை

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 02-

கோலாலம்பூரில் உள்ள உயர் நிலைப்பள்ளி ஒன்றில் மாணவன் ஒருவர், கீழே விழுந்து மரணம் அடைந்ததாக கூறப்படும் சம்பவத்தில் எந்தவொரு குற்றத்தன்மையும் இல்லை என்று பிரிக்பில்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் கு மஷாரிமான் கு மஹ்மூத் தெரிவித்தார்.

எட்டாவது மாடியிலிருந்து விழுந்த விட்டதாக கூறப்படும் அந்த மாணவனின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் குறித்து மாலை 6.59 மணியளவில் பொது மக்களால் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் இதுவொரு திடீர் மணரம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக கு மஷாரிமான் மேலும் கூறினார்.

இந்த சம்பவம் Kuen Cheng உயர் நிலைப்பள்ளியில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS