பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 02-
ஊடகவியலாளர்களின் சம்பள பாக்கி விவகாரத்திற்கு
விரைந்து தீர்வு காணும்படி சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்களை தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபாஹ்மி பாட்சில் வலியுறுத்தியுள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கு பல மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படாதது
ஏற்றுக் கொள்ள முடியாத செயலாகும் என்று அவர் சொன்னார்.
இது போன்றச் சம்பவம் நிகழக்கூடாது என்பது தமது கருத்தாகும் என்றார்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சம்பளப் பாக்கியை தங்கள் ஊழியர்களுக்கு
விரைந்து வழங்க வேண்டும் என அவர் கூறினார்.
கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்கி தென் கொரியாவுக்கு மூன்று நாள் பணி நிமித்தப் பயணம் மேற்கொண்டுள்ள ஃபாஹ்மி செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
இவ்விவகாரத்திற்கு சிறந்த தீர்வைக் காண்பதற்கு ஏதுவாக
ஊடகவியலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு இடையே தாம்
மத்தியஸ்தராகச் செயல்படத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.